தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருச்சி சிவா வை கண்டித்து கல்வி கடவுள் பெருந்தலைவர் கு.காமராஜர் வெண்கல சிலை பரிமரிப்பு மற்றும் கல்வி வளர்ச்சி கமிட்டி நிர்வாகி திரவியம், தலைமையில்,வழக்கறிஞர் ராஜா, தங்கசெல்வம், கண்ணன் , ஏசுராஜன், கருப்பசித்தன், ராமராஜன், சுப்பையா , விஜிஎஸ் கணேசன், லிங்கவேல்ராஜா, சோனாமகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும் புகழையும் கலங்கபடுத்தும் விதமாக பேசிய திருச்சி சிவா வை கண்டித்து ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி கடவுள் பெருந்தலைவர் கு.காமராஜர் வெண்கல சிலை பரிமரிப்பு மற்றும் கல்வி வளர்ச்சி கமிட்டி நிர்வாகிகள், கலந்து கொண்டு திருச்சி சிவாவை கண்டித்து கோஷமிட்டனர்.