• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனை அவல நிலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Sep 2, 2025

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை இருக்கும் மருத்துவர்கள் முறையான வைத்தியம் இல்லை மருத்துவமனை இருண்டு கிடக்கும் சூழல் மருத்துவமனைக்குள் நாய்கள் தொல்லை இயங்காத புற காவல் நிலையம் உள்ளிட்ட அவல நிலைகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மணி எஸ்டிபிஐ தொகுதி தலைவர் ராயல் கனி தேமுதிக நகர செயலாளர் செல்வம் விசிக நகர தலைவர் சக்திவளவன் புரச்சிகர கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆர் சொர்ண குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். எஸ்டி ஜி பி ஐ கட்சியினுடைய தலைவர் எம் எஸ் ஜியாவுதின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மருத்துவ அணி தலைவர் டி எஸ் எம் ஜமால் காளிமார்க் ராஜாக் யூ சி பி ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பா நகர செயலாளர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் மைக்கேல் தொழிற்சங்க பொறுப்பாளர் சுப்பிரமணியன் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் பழ நேதாஜி சீனிவாசன் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் அம்பேத்வளன்புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் ராஜாகண்ணு ஆகியோர் பங்கேற்றனர்.