பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள கழக நிறுவனர் எம்ஜிஆர் உருவ சிலையின் இடது கை பாகம் உடைந்த நிலையில்..இது பற்றிய தகவல் அறிந்த கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

எம்ஜிஆர் சிலையை உடைத்த நபரை கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என கோசம் இட்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும்,கழகம் அமைப்பு செயலாளருமான பச்சைமால்,
கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான.நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் நாகர்கோவில் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்.அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








