• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட்டுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byமுகமதி

May 16, 2026

புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 சனிக்கிழமை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமயம் தொகுதிப் பொறுப்பாளர் வழக்கறிஞர் திலீபன் ராஜா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார்.

திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் ஆ.சுப்பையா, மாநில பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ. சரவணன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மூ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மேலும் பெரியார் பெருந்தொண்டர் செ.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சு.கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.மு. தர்மராசு, மகளிர் அணியைச் சேர்ந்த வீர.வசந்தா, அரிமளம் ஒன்றியப் பொறுப்பாளர் துரை.இந்திரஜித், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, மாவட்டத் தொழிலாளர் அணியைச் சேர்ந்த அ.பத்மநாபன், பொன்னமராவதி பொன்.நாகராஜன், புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி இளங்கோ, ஒன்றியச் செயலாளர் பு.ஆம்ஸ்ட்ராங், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.மலர்மன்னன், நகர இளைஞரணி தலைவர் கோ. தாமரைச்செல்வன், பொன்னமராவதி ஆறு.பாலச்சந்தர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் ரெ.அண்ணாதுரை, துணைச் செயலாளர் த.சிவா, விராலிமலை ஒன்றிய தி.க. தலைவர் சி.குழந்தைவேல், விசிக யோகராசு, கந்தர்வகோட்டை தொகுதி மாவட்ட செயலாளர் கா.செந்தமிழ் வளவன், பொருளாளர் மருத.பார்வேந்தன், செய்தி தொடர்பாளர் வ.அழகு வேந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர் கரு.காமராசு, பொன்னமராவதி நகர செயலாளர் மலை தேவேந்திரன், திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மணிமுத்து, முருகேசன், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை வார்ப்பட்டு நவமணி, கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் சேகர், இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை அம்பேத், புதுக்கோட்டை தொகுதி மாவட்டப் பொறுப்பாளர் கண்ணையன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் சங்கர் பேசுகையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். இன்றைக்கு தமிழ்நாட்டைப் போல பல மடங்கு மக்கள் தொகை எண்ணிக்கை, பரப்பளவு, கொண்ட மாநிலங்களில்கூட பத்து 12 எண்ணிக்கையில்தான் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. 80நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலங்களில்கூட அவ்வளவுதான் இருக்கின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் மாவட்டங்கள்தோறும் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன என்றால் இது பெரியார் மண் என்பதால் மருத்துவத்திற்கும் கல்விக்கும் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தந்ததால் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில்தான் நீட் என்ற பெயரில் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவியருக்கு நடக்கும் கொடுமைகள் ஏராளம்.

இதுவரை 89முறைகள் கேள்வித்தாள் கசிவு, 48மறு தேர்வுகள் பதிவு என ஏராளமான குளறுபடிகளும் நடைபெற்றிருக்கின்றன. எனவே நீட் தேர்வை முற்றிலும் தமிழகத்தில் ஒழிக்கும்வரை திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் இணைந்து தொடர்ந்து போராடும் என்றார்.