• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து‌ போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Nov 18, 2025

மதுரை அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் கட்டண உயர்வை கண்டித்து‌ உள்ளுர் வாகன ஓட்டிகள் மற்றும் பிஜேபியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எலியர் பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது 145 ரூபாய் ஒருமுறை செல்வதற்கும் இருமுறை சென்றுவர 215 ரூபாய் வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.

ஐந்து மடங்காக உயர்த்தி உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிப்பு செய்வதாக கூறி உள்ளூர் வாகன ஓட்டிகள் பிஜேபியினர் சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சுங்கச்சாவடியில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுடன் சுங்கச்சாவடி முன்பு நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுங்கச்சாவடி முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. எலியார் பத்தி சுங்க சாவடி மேலாளர் திருப்பதி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.