• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Jul 14, 2025

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை காவு வாங்குகிற எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, டாடாபாத் சிவானந்தா காலனி பகுதியில் தி.மு.க மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி, நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பல தி.மு.க அணியினர் கலந்து கொண்டனர். ராஜீவ் காந்தி தலைமையில் பங்கேற்ற தி.மு.க வினர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பேசும்போது :-

இங்கு கூடி இருக்கக் கூடிய இளைஞர்களை பார்க்கும் போது திராவிடம் என்றும் வெல்லும் என்பது அப்பட்டமாக தெரிகிறது. 65 வது வருடம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமாக நடத்தியது மாணவரணி அமைப்பு தான். மீண்டும் இங்கு ஒரு இந்து எதிர்ப்பு போராட்டம் உருவாகும் சூழ்நிலை வந்து கொண்டு இருக்கிறது. அப்படித் தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. 1963 ல் பக்தவச்சலம் திருக்கோவில் நிதியில் இருந்து ஒரு கல்லூரி ஆரம்பித்தார்.

அதன் பிறகு நான்கு கல்லூரிகள் கட்டப்பட்டன. அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர், கலைஞர், ஸ்டாலின், உள்ளிட்டோரி ஏற்படுத்திய கல்லூரிகளுமே திருக்கோவில் நிதியில் இருந்து ஏற்படுத்தப்பட்டவை. இப்படியான கல்வியை நமக்கு கொடுத்ததால் தான் இன்று நாம் கல்லூரிகள் வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறோம். வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்து இருக்கிறார், அதில் தமிழகத்தில் கல்லூரி பள்ளிக் கூடங்கள் கட்டுகிறார்கள். இரவில் பெண்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், என்று பேசி இருக்கிறார்.

அப்படியானால் இவற்றையெல்லாம் நமக்கு கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி தான். ஒரு இடத்தை அளிப்பதற்கு முதலில் அதன் மொழியை அழித்தாலே போதுமானது. அதற்காகத் தான் அவர்கள் நம் மொழியை அழிக்க பார்க்கிறார்கள். எடப்பாடி பௌர்ணமி என்பதை கூட ஒழுங்காக சொல்லத் தெரியாதவர். கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்தப்பட்டும் அதில் சேரக் கூடிய நிதிகள் கல்லூரிகளுக்கு கொடுக்கப்படுவதால் அதில் எந்த தவறும் இல்லை.

இங்க இருக்கக் கூடிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சட்டமன்றத்தில் கேட்டு இருக்கிறார் மருதமலையில் கல்லூரி வேண்டும் என்று.. இது கூட தெரியாத எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க வினர் என்ன ? கேட்டு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் அமித்ஷாவின் B டீமாக மாறிவிட்டார்கள். கோவையில் பள்ளிக் கல்வியை முடித்து 98 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை தொடர்கிறார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு நல்ல இடத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாட்டை நசுக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா. கார்த்திக் பேசும்போது :

எடப்பாடி பழனிசாமி கோவையில் பேசும்போது, கோவில் நிலையில் கல்லூரியை கட்டுகிறார்கள் என குற்றச்சாட்டை முன் வைத்தார். அருள்மிகு மருதமலை திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக் கூடம் ஒன்று இருக்கிறது. அங்கு பாலிடெக்னிக் கல்லூரி கட்ட வேண்டும் என அம்மன் அர்ஜுனன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து இருந்தார். தற்போது அங்கு பாலிடெக்னிக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இது கூட தெரியாத எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு சென்று இருக்கிறார்.

பல்வேறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா, நூலகம் போன்ற திட்டங்கள் கோவையில் முதல்வர் ஸ்டாலினால் மட்டுமே செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் பல்வேறு திட்டங்களை தாங்கள் அறிவித்தது போன்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு சென்று இருக்கிறார் இந்த எடப்பாடி பழனிசாமி. அவர்களின் பொய்களை மக்கள் அறிவார்கள் அதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார்.தி.மு.க மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பேசும்போது :
இது வெறும் அறநிலையத் துறை நிதியை எடுத்து, கல்லூரி கட்டுகிற விஷயம் மட்டுமல்ல. நீதி கட்சியின் புரட்சியை அண்ணல் அம்பேத்கர், பெருமையாக பேசினார்.

அந்த நீதி கட்சியின் பிரதிநிதியாக தந்தை பெரியார் ஊரெல்லாம் சென்று, எங்கள் பெயருக்கு பின்பு சாதி வேண்டாம் என முழங்கினார். அப்பொழுது இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு ஆண்டு காலமாக தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டு காலமாக மோடி அரசு வந்த பிறகு, நீட், பல்கலைக் கழக மாநில குழு, சமஸ்கிருதத்தை வளர்க்க குழு, ஸ்காலர்ஷிப்பை ஒழித்தது, பள்ளிக் கல்வித் துறைக்கு வர வேண்டிய நிதிகள் நிறுத்தம்,

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கக் கூடிய ஸ்காலர்ஷிப் நிறுத்தம், போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறுத்தியது. இப்படி தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போது உறங்கிக் கொண்டு இருந்த பழனிச்சாமி, தற்போது கோயம்புத்தூரில் ஊளை விட்டுக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் இடைநேற்றல் இல்லாத மாநில பட்டியலில், முதலிடத்தில் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு. பள்ளிக் கல்வியை முடித்து விட்டு கல்லூரி கல்விக்கு போகிற மாணவர்கள் அதிகம். பழனிசாமி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் பின்னால் சென்று கொண்டு இருக்கிறார்.

சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்து இருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி. அ.தி.மு.க வில் எந்த தொண்டன் வேண்டுமென்றாலும் முதல்வராகலாம் என்று கூறினாரே, ஜானகி ஜெயலலிதா சசிகலா எல்லாம் அ.தி.மு.க வின் தொண்டர்களா?.. இப்படிப்பட்டவர்கள் திராவிட இயக்கங்களின் பெயர்களை சொல்லவே கூடாது. உங்கள் கட்சியில் இருக்கக்கூடிய திராவிடம் அண்ணாவின் பெயர்களை தயவு செய்து எடுத்து விடுங்கள். நாங்கள் நீட்டுக்காகவும் நியூ எஜுகேஷன் பாலிசி காகவும் நிறைய போராட்டங்களை செய்து இருக்கிறோம்.

ஆனால் கடந்த நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்காக ஒரு முறையாவது நீட் வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாரா ??.. மாணவர்களுக்கு வழங்கக் கூடிய உதவித் தொகையை ஏன் ? நிறுத்துகிறீர்கள் என மோடியிடம் ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா??.. எடப்பாடி பழனிச்சாமியின் மூளையில் இருப்பது திராவிட மூளை அல்ல.. சங்கிகளின் மூளை.. அதனால் தான் உதயநிதி ஸ்டாலின் அவரை முழு முதற்சங்கு என குறிப்பிட்டார். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கல்வியின் பக்கம் நிற்கிறோம்.

அதனால் தான் எங்களின் முதல்வர் அனைவரையும் திரும்பத் திரும்ப படி என கூறுகிறார். கோவை என்பது பெருமைமிகு அவிநாசிலிங்க செட்டியார், ஜி.டி நாயுடு, சண்முகம் செட்டியார், போன்றவர்கள் கோவையின் கல்வியை வளர்த்து, அறப்பணியில் இருந்து கல்வி கொண்டு வரப்பட்ட மண். ஒரு கொடும் கோவையில் உங்களால் கால் வைக்க முடியாது. எங்களுக்கு ஒருபோதும் சாதி மத உணர்வு இல்லை, அனைத்து உயிர்களும் எங்களுக்கு உயிர் தான். இருக்கக்கூடிய ஒரு இளைஞரை யாவது நான் ஹிந்தி படித்துவிட்டு வட மாநிலத்திற்கு வருவேங்கென சொல்ல வைக்க முடியுமா ? அங்கிருப்பவர்கள் தான் பாணி புரிக்கு விற்க இங்கு வருகிறார்கள். ஒரு போதும் எங்களுடைய தாய் கல்வியை விட்டு விட்டு நாங்கள் நெருக்க மாட்டோம். மேற்கு மண்டலம் எப்பொழுதுமே தி.மு.க வின் பக்கம் என்று கூறினார்.