• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்!!

BySeenu

Jul 28, 2025

கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும். உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை பாப்பம்பட்டி பகுதியை சுற்றிலும் 9 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், இதில் பணியாற்றக் கூடிய இளம் பெண்கள் சாலையில் நின்று அந்த வழியாக செல்லும் இளைஞர்களை கட்டாயபடுத்தி விபச்சாரத்திற்கு அழைப்பதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டமும் இதனால் அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் அவர்கள், இதுபோன்ற சமூக விரோத செயல்களை உடனே தடை செய்ய வேண்டும் என்று ஊர் கூடி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.

எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.