• Tue. Dec 10th, 2024

சொத்து வரி உயர்வு ட்பெய்லர் தான் ..இன்னும் பல காத்திருக்கு- எடப்பாடி பழனிசாமி

Byகாயத்ரி

Apr 2, 2022

தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அவர் கூறியுள்ளதாவது, சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த திமுக அரசு, நகர்புற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்தவர்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை வரியை உயர்த்தி இருக்கிறது. சொத்து வரி உயர்வு வெறும் டிரெய்லர் தான். இனிவரும் காலங்களில் இது போல மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என விமர்சித்துள்ளார்.