• Fri. Apr 19th, 2024

இன்று முதல் 3 நாட்கள் கோயிலுக்கு செல்லத் தடை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி,தமிழகம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

மேலும்,வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்,கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை.எனவே,இந்த நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும்,திங்கள் முதல் வியாழக்கிழமை வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்த நிலையில்,வரும் 9-1-2022 அன்று அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

ஆனால்,பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.
9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.


9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம்,இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.அவ்வாறு பயணிக்கும் போது,பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும் என்றும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *