

கலவை அருகே செய்யாத்து வண்ணத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1கோடி மதிப்புள்ள சுமார் 1.7395 லிட்டர் எரிசாரயத்தை மதுவிலக்குப் போலீஸார் பறிமுதல் செய்து தீவைத்து அழித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த செய்யாத்து வண்ணம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வைக்கோலில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 கோடி மதிப்பில் 497 கேன்கள் என 17,395 லிட்டர் எரிசாராத்தை இராணிப்பேட்டை மதுவிலக்குப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அவை அனைத்தையும் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில மாவட்ட கலால் துறை அலுவலர் சத்திய பிரசாத் மற்றும் வாலாஜா கலால் பிரிவு வட்டாட்சியர் நடராஜன், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, மதுவிலக்கு அமலாக்க ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் எரிசாரய கேன்களை பள்ளத்தில் வெட்டி ஊற்றி தீவைத்து எரித்து அழிக்கப்பட்டது.

இதில் தலைமை காவலர் ராஜேந்திரன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் உடன் இருந்து எரிசாரயத்தை முற்றிலுமாக அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.