• Tue. Jan 6th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமண விழா!

Byஜெ.துரை

Nov 22, 2024

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,
பா.ம.க கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, கவின்கேர் குழும நிறுவனர் சி.கே ரங்கநாதன்,
நடிகர்கள் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் அட்லீ இசையமைப்பாளர் அனிருத், லைகா தமிழ்குமரன் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா,
நடிகர் அருள்நிதி, நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகர் மஹத், இசையமைப்பாளர் தரண்குமார், இயக்குநர் தமிழரசன், பச்சமுத்து, நடிகர் கலையரசன், நடிகர் டாக்டர் தீரஜ்
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், இயக்குநர் ரவிகுமார், பாடலாசிரியர் விவேக், நடிகர் பாலசரவணன், நடிகை தேஜு அஸ்வினி, தயாரிப்பாளர் அருண் விஸ்வா, நடிகை காயடு லோகர், நடிகை சம்யுக்தா, விஸ்வநாதன், நடிகர் பிரேம் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் மற்றும் நட்சத்திர நடிகர்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.