கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 450 மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பன்னிரண்டாம் வகுப்பில் 600 மதிப்பென்களுக்கு 500 மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசு தொகையும், கேடயமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை டவுன் பள்ளி இமாம் உதுமான் அலி ஹஜ்ரத் கிராத் ஓதி துவங்கி வைத்தார். கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் ஜெய்னுலாபுதீன் அம்பா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். செயலாளர் நாகூர் மீரான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
வாவேர் பள்ளி தலைமை இமாம் அலாவுதீன் ஹஜ்ரத், முஹைதீன் பள்ளி சம்சுல் ஆலம் உஸ்மானி ஹஜ்ரத் ஆகியோர்கள் கல்வியின் தேவை குறித்து மாணவர்களிடம் பேசினார்கள். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரிசுகளை துணை தலைவர் ரபிக், பொருளாளர் சபியுல்லாஹ், இணை தலைவர் அப்துல் சமது, துணை செயலாளர் அப்துல் காதர், இணை செயலாளர் சர்புதீன், கமிட்டி உறுப்பினர்கள் சித்திக், அஜ்மல் கான் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள் .
நிகழ்ச்சியை வின்னர் அலிம் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.