• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

20 நிமிடங்களில் 16 வகை உணவுகளை சாப்பிட்டால் பரிசு

Byவிஷா

Feb 26, 2024

ஈரோடு அருகே புதிய உணவகம் திறப்புவிழாவையொட்டி, 16வகையான உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் பாபு என்பவர் புதிதாக உணவகம் திறந்துள்ளார். உணவகத் திறப்பு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
500 ரூபாய் கட்டணம் செலுத்தி பிரியாணி, மீன், முட்டை, நாட்டுக்கோழி, வாத்துக்கறி என 16 வகையான உணவுகளை சாப்பிடுவதற்காகப் போட்டியாளர்கள் பலர் பங்கேற்றனர். 20 நிமிடங்கள் 16 வகையான உணவுகளைச் சாப்பிடும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 800, மூன்றாம் பரிசாக ரூபாய் 500 அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியாளர்களில் சிலர் போட்டியில் வெற்றி பெறாததாலும், வயிறு நிறைய சாப்பிட்டு ஆறுதல் அடைந்தனர். உணவகத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.