• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் படப்பிடிப்பில் பிரியங்கா மோகன்?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ், பூஜா ஹெக்டே, நெல்சன், உள்ளிட்ட பலர் விஜயின் அனைவரும் ஜாலியாக ராயல் ரோல்ஸ் காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் செம வைரலானது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மேக்கிங் வீடியோ வரும் 24-ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என சன்டிவி நிறுவனம் காலையில் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அந்த ப்ரோமோவும் சிறப்பாக இருந்தது. அதில் ரசிகர்கள் முக்கியமான ஒரு விஷியத்தை கண்டு பிடித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது பிரியங்கா அருள் மோகன் படப்பிடிப்பிற்கு சென்று நேரம் கழித்துள்ளார். அவர் சென்றுள்ள அந்த காட்சி இன்று வெளியான மேக்கிங் வீடியோவில் இருந்தது. இத்தனை பார்த்த ரசிகர்கள் அதை புகைப்படமாக எடுத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.