• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தன் குழந்தையை லைம்லைட்டில் காட்டிய பிரியங்கா சோப்ரா..

Byகாயத்ரி

Aug 23, 2022

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மால்தி என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை.

அதையடுத்து சில முறை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகத்தை மறைத்தே வெளியிடுவார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திலும் குழந்தையின் முகத்தை மறைத்தே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.