புதுக்கோட்டை மவுண்ட்சியான் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த சுவேதா என்ற மாணவி மாவட்ட அளவில் +2 தேர்வில் 596/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கீர்த்திகா (593) மற்றும் பாலசுந்தரி (592) ஆகியோர் பெற்றுள்ளனர். ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் மாவட்ட அளவில் முதல் 33 இடங்களை சாதனை படைத்துள்ளனர். ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்கள் ஊக்கமளித்ததாக தெரிவித்தனர்.