தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவை கலைப்பதற்கான கருத்துக்களை அந்த வாரியம் மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு போதிய காரணம் இல்லை என்றால் விண்ணப்பங்களை நிராகரிக்க அந்த வாரியத்திற்கு முழு அதிகாரமும் உண்டு. தற்போது மாநிலத்திற்கு ஒரே ஒரு வாரியம் மட்டும் இருப்பதால் விண்ணப்பங்கள் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியத்தை அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.