

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக பதவியேற்றார். அவர், புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றுக் கொண்டார். இளவரசன் சார்லஸ் பிரிட்டன் மன்னரான நிலையில், அவரது மனைவி கமிலா ராணி ஆனார். இதன் மூலம் விலை உயர்ந்த கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலாவின் வசம் சென்றுள்ளது.கோஹினூர் வைரம், ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 21 கிராம் எடை கொண்ட கோகினூர் வைரம் ராணியின் கிரீடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

