• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”

ByG.Ranjan

Jul 15, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசு மாணவ-மாணவியர்களுக்குப் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது, அதில் உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்தது ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”. இன்று (15.07.2024) பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி எஸ்.பி.கே தொடக்கப்பள்ளியில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார்.