• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒமைக்ரான் குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

Byகாயத்ரி

Dec 22, 2021

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 90 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 123 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 57 பேரும், டில்லியில் 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானாவில் 20 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், ஜம்மு – காஷ்மீரில் 3 பேரும், ஒடிசாவில் 2 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 2 பேரும், ஆந்திரா, சண்டிகர், தமிழகம், லடாக், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பண்டிகைகள் வர இருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனையின் போது, ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.