• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மெய் நிகா் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க்கவுள்ளார்…

Byகாயத்ரி

Jun 15, 2022

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கியஅரபு எமிரேட்ஸ் போன்ற 4 நாடுகள், ஐ2-யு2 எனும் நாற்கர பொருளாதார பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பினுடைய மெய் நிகா் உச்சிமாநாடானது வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெய் நிகர் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோபைடன், இஸ்ரேல் பிரதமர் நெப்தாலி பென்னட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அத்துடன் இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் உணவுப்பாதுகாப்பு நெருக்கடி மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.