• Fri. Jan 24th, 2025

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வேட்ப்பாளர் யார் என்று அறிவிக்காத சூழலில், கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியி வளாகத்தில் நாளை 15-ம் நாள் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மதிய நேரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் நிகழ்விற்காக. 4500_காவலர்கள் சிறப்பு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். காவல்துறையின் உயர் அதிகாரிகள் 150_க்கு மேல் உயர் அதிகாரிகள் கண் காண்பிப்பு பணியில், கன்னியாகுமரி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்(மார்ச்_15) நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி ஒரு சர்வதேச பகுதியில, காணும் இடமெங்கும் சீர் உடை அணிந்த காவலர்கள் காணும் இடம் எங்கும் நிறைந்திருப்பதுடன், காவல்துறை வாகனங்களின் ஓட்டம். கன்னியாகுமரி இயல்பு நிலையில் இல்லாது, ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கியிருக்கிறது.

கன்னியாகுமரி பகுதியில் மெடிக்கல் ஷாப் தவிர ஏனைய அனைத்துக் கடைகளையும் அடைக்கும் படி காவல்துறை வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.