கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18_வார்டுகள் உள்ளது. இதில் 17_வது வார்டில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற வார்டில், தற்போதைய காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மறக்குடித் தெருவில் அலங்கார தரை ஓடு பதிக்கும் பணியையும், கன்னியாகுமரி காவல் நிலையம் எதிரேயுள்ள சாலை விரிவாக்கம் மற்றும் பிள்ளையார் கோயில் தெருவில் மழைநீர் ஓடை பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் கிருஷ்ணபிள்ளை, 5_வது வார்ட் கவுன்சிலர் சுஜா அன்பழகன், முன்னாள் உறுப்பினர் தாமஸ், எஸ்.அன்பழகன், அறிவழகன், கணேசன், நிசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.