• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்..

Byகாயத்ரி

Aug 27, 2022

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட morning consult என்ற அமைப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 22 உலகத் தலைவர்களைக் கொண்ட பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% ஆதரவு பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரும், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, 63 சதவீதம் மற்றும் 54 சதவீத ஆதரவுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5வது இடத்தையும், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 6வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன்பின், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 38 சதவீத பெற்று 7வது இடத்தையும் பிடித்துள்ளார்.