• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

என்னை அவமானப்படுத்தினார் பிரதமர் மோடி-ராகுல் குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Feb 14, 2023

நாடாளுமன்றத்தில் என்னை பிரதமர் மோடி அவமானப்படுத்தினார் என கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தனது சொந்த தொகுதியான கேரளமாநிலம் வயநாட்டில் தொண்டர்களிடம் பேசிய அவர்… நாடாளுமன்றத்தில் வைத்து, ‘என் பெயரில் ஏன் நேரு இல்லை?’ என நேரடியாக என்னை அவமானப்படுத்தினாலும் அப்பேச்சை நீக்காத சபாநாயகர், அதே நேரத்தில், அதானி – மோடி குறித்து, நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார் . நான் யாரையும் அவமானப்படுத்தி பேசவில்லை. பிரதமர் மோடியை பார்த்து தான்பயப்படுவதில்லை என்றும் “தன்னை சக்திவாய்ந்தவர் என்றும், மக்கள் பயப்படுகிறார்கள் என்றும் பிரதமர் மோடி எண்ணுகிறார்.அவர் பிரதமர் என்பது பெரிய விஷயம் அல்ல; ஆனால், ஒருநாள் உண்மையை எதிர்கொண்டே ஆக வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.