அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களில் சென்னை உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, கரநாடகா உட்பட பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களிலும், காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் முக்கிய நிறுவனங்களில் சோதனை நடைபெறுகிறது.