வரும் மே.26ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள தமிழக வருகிறார் பிரதமர் மோடி.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி தமிழகம் வருகிறார்.மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் துவக்கி வைக்க உள்ளார். சுமார் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.
ஏற்கனைவே கடந்த ஜனவரி மாதம் மதுரை வரவிருந்த பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களார் ரத்து செய்யப்பட்டது .
சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
