• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவனுக்கு ஆட்டோகிராப் போட்ட பிரதமர் மோடி

ByA.Tamilselvan

May 24, 2022

குவாட் மாநாட்டிற்காக சென்ற பிரதமர் மோடி ‘இந்தி தெரியுமா?’ எனக்கேட்டு ஜப்பான் சிறுவர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக்கொடுத்துள்ளார்.
குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவ ருக்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடு கள் இணைந்து ஏற்படுத்தியதே ‘குவாட்’ அமைப்பாகும். அதன் அடிப்படையில், உறுப்பு நாடுகளி டையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அவ்வப்போது மாநாடு களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், குவாட் அமைப்பின் 4-ஆவது உச்சி மாநாடு தற்போது ஜப்பானில் நடைபெறு கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, ஞாயிறன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஜப் பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சென்ற டைந்த அவருக்கு இந்திய வம்சாவளி யினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமரை வரவேற்க இந்திய வம்சாவளியினர், அவர் தங் கும் விடுதியின் வாயிலில் கூடியிருந்த னர். பிரதமருக்கான வரவேற்பு ஏற் பாட்டில் ஜப்பானிய சிறுவன் மற்றும் சிறுமியும் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை இந்தி யில் வரவேற்றனர். உடனே பிரதமர் மோடி, “நீங்கள் எங்கிருந்து இந்தியைக் கற்றுக் கொண்டீர்கள்? உங்களுக்கு இந்தி நன்றாகத் தெரியுமா?” என ஆச்சரிய மாக கேட்டு, அவர்களுக்கு தனது ஆட்டோகிராபை போட்டுக்கொடுத் தார்.