• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குஜராத்தில் இன்று பிரதமர்
மோடி தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி இன்று மாலை பேரணியாக செல்கிறார். இந்த பேரணியில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணிக்கிறார். குஜராத் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோடி இன்று சாலை மார்க்கமாக 3 மணிநேரம் மெகா பேரணியில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செல்லும் வகையில், இந்த பேரணி அமையும். 50 கி.மீ தூரம் சாலை மார்க்கமாக பிரதமர் வருகை தரும் 35 இடங்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்த பிரமாண்ட பேரணி நரோடா காமில் மதியம் 3 மணிக்கு தொடங்கி மாலை 6:25 மணிக்கு சந்த்கேடாவில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.