• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பஜனையில் பிரதமர்.. தோசை சுடும் அண்ணாமலை …ஓட்டு வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு ..

சீக்கிய மதகுருவான ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் இணைந்து இசை கருவியை இசைத்து தரிசனம் செய்தார்.

ஆன்மிகவாதி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிக குரு என பன்முகங்கள் கொண்ட குரு ரவிதாஸின் 645வது பிறந்தநாளை ஒட்டி, ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி கரோல்பாகில் உள்ள குரு ரவிதாஸ் விஸ்ரம் தாம் மந்திரில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார். குரு ரவிதாஸ் திருவுருவச் சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற ஷவாப் கிர்தான் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்த சீக்கியர்களுடன் இணைந்து இசைக்கருவி இசைத்து பாடல்கள் பாடி தரிசனம் மேற்கொண்டார்.ஐந்து மாநில தேர்தல் நடைபெற்று வருவதால் பிரதமர் இப்படி வித விதமாக வேடிக்கை காட்டி வருகிறார் என்று இணையத்தில் நெட்டிசன் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.

தேசிய அரசியலில் நிலை இப்படி என்றால் தமிழகத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை கவர டீ போடுவது துணி துவைப்பது , பாத்ரூம் கழுவுவது, தோசை சுடுவது , இஸ்திரி போடுவது என ஜாமாய்த்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க வீதி எங்கும் ஓட்டு கேட்டு போவோர்கள் கண்ணில் செருப்பு தைக்கும கடை , சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் , கறிக்கடை இப்படி எதுவும் கண்ணில் படவில்லையா ? இல்லையென்றால் இவர்கள் எல்லாம் கண்ணில் படகூடாதவர்களா ? என இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.