• Fri. Apr 26th, 2024

உலகம் சுற்றும் வாலிபனாய் உள்ள சுயேட்சை வேட்பாளர்!

தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிக்களுக்கு இணையாக வாக்குறுதிகளை சுயேட்சை வேட்பாளர்களும் அறிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே தமிழகத்தில் சில இடங்களில் தேர்தல் நடக்கும் முன்னரே சுயேட்சை வேட்பாளர்கள், கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதே போல், தன்னால் முடிந்த வாக்குறுதிகளை மட்டும் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார் மதுரையை மதுரை மாநகராட்சி 63-வது வார்டில் உலக உருண்டை சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜெயசிங்கராயர் என்ற ஜெசி

மேலும் வாக்குறுதிகள் குறித்து அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் மக்கள் பணி ஆற்றி வருவதாகக் கூறிய அவர், கொரோனா காலத்தில் கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு நேரடியாகச் சென்று தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகவும் கூறுகிறார். 40 ஆண்டுகளாக 63-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்தவன் என்பதால் இப்பகுதியின் மிக முக்கிய அடிப்படைப் பிரச்சனைகள் தெரியும். அனுப்பானடி கால்வாயை சுத்தப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சித்தும் அது முடியாமல் போன நிலையில், தானே பிரதிநிதியாகச் சென்றால் தான் வலுவாகக் குரல் கொடுக்க முடியும் என்றார்.

மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக கொசு வலையுடன் பிரச்சாரம், கண்களைக் கட்டிக்கொண்டு பிரச்சாரம் என பல்வேறு நூதன பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனை மக்கள் புரிந்துகொண்டு முன் வந்து ஆதரவு அளிப்பது தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். இலவச ஆம்புலன்ஸ் வசதி, சி.சி.டி.வி. வசதி, பெண்களுக்கு கணினிப் பயிற்சி மையம், 24 மணி நேர தொடர்பு கொள்ளும் வசதி, வேலை வாய்ப்பு தகவல்களை அளித்து உதவி செய்வது என வேறு வேட்பாளர்கள் அளிக்காத வாக்குறுதிகளை தான் முன் வைத்துள்ளதாகவும், தன்னைத் தேர்ந்தெடுத்தால் 63 வார்டை முன்மாதிரியான வார்டாக மாற்றிட இப்பகுதியில் வசிக்கும் ஒருவனாக மக்களுடன் மக்களாக சேர்ந்து பணியாற்றுவேன். இதனால் வெற்றி கிடைக்கும் என்கிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *