• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

போரில் காயமடைந்த வீரர்களை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட உக்ரைன் அதிபர்..

Byகாயத்ரி

Mar 14, 2022

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருத்தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீரர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் வீரர்கள் செய்த சேவைகளை பாராட்டி பதக்கங்களை வழங்கினார். வீரர்களிடம் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி நீங்கள் விரைவாக குணம் அடைவீர்கள்.
உங்களது டிஸ்சார்ஜ் எங்களது பொதுவான வெற்றிக்கான சிறந்த பரிசாகும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.மேலும் அவர் காயம் அடைந்த வீரர்களுடன் செல்ஃபி எடுத்து உற்சாகப்படுத்தினார்.