• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தார்

ByA.Tamilselvan

Mar 18, 2023

திருவனந்தபுரத்திலிருந்து தனி ஹெலிகாப்டடர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த ஜனாதிபதி படகு மூலமாக விவேகானந்தர் நினைவுமண்டபத்திற்கு சென்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 வது முறையக தமிழகம் வந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் தரிசனம் செய்த அவர் தற்போது கன்னியாகுமரி வந்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றவின் 2 முறையாக தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்படித்தக்கது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மைதானத்தில் வந்து இறங்கினார். கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். கன்னியாகுமரி படகு துறைக்கு படகு மூல ம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்கின்றனர். தொடர்ந்து அங்குள்ள தியான மண்டபத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறிது நேரம் அங்கு தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.