• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ரம்ஜான் முன்னிட்டு ஊர்வலமாக ஈத்கா திடலில் தொழுகை..,

ByRadhakrishnan Thangaraj

Mar 21, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான ஈகை திருநாளாம் ரம்ஜான் திருநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடைகள் அணிந்து சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் இருந்து ஊர்வலமாக இமாம்கள், மதகுருக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து அல்லாஹு அக்பர் என்ற கோஷமிட்டபடியே முடங்கியார் சாலை வழியாக மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈத்கா மைதான திடலை வந்தடைந்தனர்.

அங்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து பக்தியுடன் தொழுகையில் ஈடுபட்டனர்.