• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அடுத்த 20 வருடங்களுக்கு பாஜக கையில் தான் நாம்… பிரஷாந்த் கிஷோர் அறிவிப்பு

Byகாயத்ரி

May 24, 2022

விருப்பப்பட்டாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20 முதல் 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சூழலும் என்று பிரபல தேர்தல் வியூகம் பிரஷாந்த் கிஷோர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெல்லியில் நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பாக தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

எந்த ஒரு விஷயம் அல்லது கருத்து அதன் உச்சத்தை அடைந்த பிறகு கட்டாயம் அது சரிவை சந்திக்கும். இதுதான் விதி. எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று பலரும் கருதுகிறார்கள். இதனை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இது உடனே நடைபெறாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவின் சரிவு அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களுக்குள் நடைபெறாது. அதில் இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால் அந்த கட்சி அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதற்காக இனி வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று நான் கூறவரவில்லை. ஆனால் அடுத்த 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சூழலும். இன்னும் சரியாக கூறினால் நீங்கள் அடுத்த முப்பது வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்க்க வேண்டும். அதற்கு மாறாக அந்த காட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது என்ற சூழலில் நிலவும். சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.