மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்றுகூறி ஊர்வலத்தில் வந்தனர். பிரதோஷ ஏற்பாடுகளை பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா 8வது வார்டு கவுன்சிலர் கூடைப்பந்தாட்ட சேர்மன் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல்திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத கோவிலிலும் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்து சென்றனர்.