மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ் லிங்கம், நந்தி பகவான், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பக்தகளாக நடத்தப்பட்டது. இதை அடுத்து, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தை அலங்காரமாகி, கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். இதை அடுத்து, பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் இளமதி, தொழில் அதிபர் எம். வி. எம். மணி , கவுன்சிலர் எம். வள்ளிமயில், பள்ளித் தாளாளர், கவுன்சிலர் எம்.மருது பாண்டியன், கோயில் கணக்கர் சி. பூபதி, வசந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதே போல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி, தென்கரை மூலநாதர் சுவாமி, மதுரை அண்ணா நகர் தாசில்நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், பிரதோஷ நடைபெற்றது. இக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதே போல, தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயக ஆலயத்திலும், பிரதோஷம் முன்னிட்டு சிவன் மீனாட்சி சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர். மதுரை அண்ணா நகர், யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள அழியா பதீஸ்வரருக்கு, பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய அர்ச்சகர் மணிகண்டன் மற்றும் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.