கோடை காலம் ஆரம்பித்தாலே, அனைத்து உயிரினங்களுமே வெப்பத்தில் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது . அதையுணர்ந்து மனிதர்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள தேவையான தற்காப்புகளைச் செய்து கொள்கின்றனர். .ஆனால் பறவைகளும், விலங்குகளும் அவற்றுக்குத் தகுந்தவாறு தகவமைப்பு முறைகளை காலம் காலமாகக் கையாண்டு வந்தாலும் அதற்கு தேவைப்படும் அளவுக்கு போதுமான வளங்கள் இல்லாமல் அழிந்து போய் கொண்டிருக்கும். இந்த கால கட்டத்தில் சிட்டுக்குருவி பறவைகள் போன்றவைகள் அழிந்து வரும் நிலையில் அவற்றை வெயிலிலிருந்தும் காப்பாற்றுவதற்கு அவ்வப்போது பலரும் பல வகையான முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை ஆட்சியராக பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் பிரபா அறிவுறுத்தலின்படி, அப்பகுதியில் உள்ள மரங்களில் மண் பானையில் நீர் வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால் தாகம் எடுக்கும் பறவைகள் இந்த பானையில் இருக்கக்கூடிய நீரை அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்கிறது. முடிந்த வரை நாமும் நமது வீடுகளில் சிறிய தட்டுகள் பானைகளில் உணவுடன் சிறிது நீரையும் வைக்கும் பொழுது அவற்றை அருந்தி தாகத்தினை போக்கி கொள்ளும்.