சிவகங்கை மாவட்டம் சிவகங்கை 27 வது வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இந்திய கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிக்க வாக்குகள் கேட்டு, சிவகங்கை நகர் மன்ற தலைவரும், நகர் கழக செயலாளருமான சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் 27வது வார்டு விநாயகர் கோவில் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினர். பொதுமக்களிடம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலன் காக்க காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் நகர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் வட்டக்கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், அனைத்து அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.



