• Tue. Feb 18th, 2025

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கருத்தம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை

ByG.Suresh

Apr 2, 2024

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே ஓக்கூர் என்ற இடத்தில் நிலையான கண்காணிப்பு குழு மண்டல துணை வட்டாட்சியர் சங்கர் சார்பு ஆய்வாளர் பாண்டி உள்ளிட்டோர் ஒக்கூர் கருத்தம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனையில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மேலூரை சேர்ந்த கோபி என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 1,21,000 ரூபாய் யை பறிமுதல் செய்தனர். கடன் வாங்கியதாகவும், வெளிநாட்டுக்குச் செல்ல ஏஜென்ட் கொடுக்க பணத்தை எடுத்துச் சென்றதாகவும், தெரிவித்தும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து 1, 21,000 பணத்தை பறிமுதல் செய்து சிவகங்கை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.