மதுரை மாடக்குளம் மெயின் ரோடு சர்ச்சு அருகே இன்று காலை ஆறு மணி அளவில் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்காக கரும்பு ஏற்றி வந்த லாரி அளவுக்கு அதிகமாக மேலே ஏற்றி இருந்ததால் மின் கம்பத்தில் உரசியது.

இது மின் கம்பத்தில் ஒன்றோடு ஒன்று உரசியதால் டிரான்ஸ்பார்த்தில் உள்ள ஜம்பர் வெடித்து சிதறியது. அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக மாடக்குளம் பெரியார் நகர் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு கந்தன் சேர்வை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஆனது ஏற்பட்டது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே அடுத்த பத்து நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி மின் இணைப்பினை சரி செய்தனர்.

அதிகாலை நேரத்திலே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். எனினும் மின்வாரியர்கள் துரிதமான செயல்பாட்டினால் மின்விநியோகம் விரைவில் கொடுக்கப்பட்டது நேரம் காலம் பார்க்காமல் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பணியை செய்ததால் விரைந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.




