• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…

ByAlaguraja Palanichamy

Aug 8, 2022

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றன.

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை பெறுகின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால் அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். சத்தம் இல்லாமலும் பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகியது என்றான். இதனாலேயே விடியற் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவதால் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது.

சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. தினமும் சூரிய உதய நேரத்தைப் பொறுத்து பிரம்ம முகூர்த்த நேரமும் மாறுபடும். பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

அதனால் பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் அனைவரும் அறிந்திருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுவது மறுபிறவிதானே. எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள் .

பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.