கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு த வெ க பிரச்சாரத்தில், அப்பாவி இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என்று 41 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் ஆங்காங்கே கருப்பு நிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களை பழிவாங்கி தப்பி ஓடிய விஜய் என்கின்ற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய் என்று அச்சிடப்பட்டு, தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற வாசகங்கள் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளன.