• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்கு

ByA.Tamilselvan

May 24, 2022

மதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்குபதிவு
உலகம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் அதில் இடம்பெற்றுள்ள வசனத்தை மய்யப்படுத்தி “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! பாத்துக்கலாம்..!” என்றவாறு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.தொடர்ந்து அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் போலீசாரால் அகற்றப்பட்டது.