• Fri. Apr 19th, 2024

பிரபல தமிழ் நடிகர்செவ்வாழை ராசு காலமானார்..!!

ByA.Tamilselvan

May 18, 2023

பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு இன்று மதுரையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவர் கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராசு, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு செவ்வாழை ராசு என அழைக்கப்பட்டார்.நான் சிவப்பாக இருந்ததால் செவ்வாழை ராஜு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படி தான் எனக்கு இந்த பெயர் வந்தது. எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம். நாங்கள் ஆரம்பத்தில் விவசாயம் தான் செய்து கொண்டிருந்தோம் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.அவருக்கு வயது 70. இவருடைய இறப்பிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *