• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபலமான நடிகர் மயில்சாமி காலமானார்

ByA.Tamilselvan

Feb 19, 2023

நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.அவருக்கு வயது 57. சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு ரமேஷ் கண்ணா, மனோ பாலா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் 1984ஆம் ஆண்டு தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கொரோனா காலகட்டத்தில் தனது விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார்.