• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருவாதவூர் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா..!

Byவிஷா

Mar 11, 2023

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று நள்ளிரவு வெகு விமர்சியாக நடைபெற்றது.
18 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் நூறு டன்னுக்கும் மேற்பட்ட பச்சை விறகால் எரியூட்டப்பட்ட தீக்குண்டம் வளர்க்கப்பட்டு தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து வந்த பக்தர்கள் 200 க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.