• Mon. Apr 29th, 2024

சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டம் தொடக்கம்..!

Byவிஷா

Jan 10, 2024

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூ.1000 பொங்கல் பரிசாக தரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் 13-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. 13-ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகை பெறாதவர்கள் 14ஆம் தேதி பொங்கல் பரிசு பெறலாம் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தரப்படுகிறது. பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2,436 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகம் முழுவதும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *