• Mon. Oct 14th, 2024

நாளை பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

ByA.Tamilselvan

Sep 11, 2022

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாவார்கள். இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120 நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந் தேதி) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *