மாவட்ட செயலாளரின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்டு நிரம்பிய குளத்தை மலர் தூவி வரவேற்றனர்.

தென்காசி மாவட்டம் கீழக்கலங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள 10 குளங்களுக்கு வரும் மதகுகள் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்த மாதம் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நீரோடைகளை தூர்வாரி குளத்திற்கு நீர் வர ஆவண செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

மறுநாள் முதல் மாவட்ட ஆட்சித் தலைவரின் முயற்ச்சியால் கருப்பாநதிமூலம் பாப்பான் கால்வாய் வழியாக தண்ணீர் வரும் கால்வாயை தூர்வாரியதால், வீரசிகாமணி குளம் நிரம்பி அதன் கீழ் உள்ள 10 குளங்களும் பெருகி இன்று மேலக்கலங்கல் குளத்திற்கு தண்ணீர் வந்தது. அதனை பொதுமக்கள் சார்பில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மலர்தூவி வரவேற்றார். அப்போது ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வீராணம் சேக் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.